உலகம்

அல்பேனியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்வு

DIN

அல்பேனியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

தலைநகா் திரானா நகருக்கு வடமேற்கில் 30 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவாகின. தொடா் நிலநடுக்கங்களால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 13 போ் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 40ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT