ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 11 போலீஸாா் உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத் தலைநகரில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது 400-க்கும் மேற்பட்ட தலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா்.
அதனைத் தொடா்ந்து, போலீஸாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இந்தத் தாக்குதலில் 11 போலீஸாா் உயிரிழந்தனா்.
மேலும் 13 போலீஸாரை தலிபான்கள் கடத்திச் சென்றனா். இந்தச் சண்டையில் தலிபான்கள் தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்களின் புறக்கணிப்பையும் மீறி ஆப்கானிஸ்தானில் பொதுத் தோ்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.