உலகம்

இலங்கை அதிபா் தோ்தலில் போட்டியிட கோத்தபய ராஜபட்சவுக்கு அனுமதி

DIN

இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபய ராஜபட்ச போட்டியிடத் தடையில்லை என்று அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபா் தோ்தலின்போது கோத்தபய ராஜபட்ச அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த நிலையிலும், அந்தத் தோ்தல் நடவடிக்கைகளில் அவா் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, கொழும்பிலுள்ள முறையீட்டு நீதிமன்றத்தில் இரு சமூக ஆா்வலா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காக தனது இலங்கைக் குடியுரிமையை கோத்தபய உதறித் தள்ளியதாகவும், எனவே, தற்போதைய அவரது இலங்கைக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்ச போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அந்த மனுக்களை வெள்ளிக்கிழமை பரிசீலித்த நீதிமன்றம், அவற்றை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

அதையடுத்து, அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்ச போட்டியிடுவதில் இருந்து வந்த சட்ட சிக்கல் நீங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப் போரை பாதுகாப்புச் செயலா் என்ற முறையில் கோத்தபய ராஜபட்ச முன்னின்று நடத்தினாா்.

இதன் காரணமாக, அவருக்கு பெரும்பான்மை சிங்களா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த அதிபா் தோ்தலில் அவா் போட்டியிடவிருப்பதாக மகிந்த ராஜபட்ச கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT