உலகம்

சீன-வட கொரியத் தூதாண்மையுறவின் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு இரு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து

DIN


சீன-வட கொரியத் தூதாண்மையுறவின் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், வட கொரிய தொழிலாளர் கட்சியின் ஆணையத் தலைவரும், தேசிய அரசவையின் தலைவருமான கிம் ஜுங் உன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

ஷிச்சின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில், சீன-வட கொரிய பாரம்பரிய நட்பு, இரு கட்சிகளுக்கும், இரு நாடுகளுக்கும் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் பொதுச் செல்வமாகும். இரு நாட்டு வளர்ச்சி மற்றும் மக்களுக்கு நலன் தரும் வகையில், வட கொரியாவுடன் இணைந்து பாடுபட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

கிம் ஜுங் உன் தனது வாழ்த்துச் செய்தியில், ஷிச்சின்பிங்குடன் இணைந்து நட்பு மற்றும் ஒற்றுமையைப் பயன்படுத்தி, சோஷலிச லட்சியத்தையும், கொரிய தீபகற்பம் மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் உறுதியாகப் பேணிகாக்க வட கொரியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT