முகப்பு
உலகம்

இத்தாலியத் தீவு ஒன்றில் அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி 

இத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:18 AM
இத்தாலி படகு விபத்து
பகிர்:

மிலன்: இத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு கடற்படை திங்களன்று தெரிவித்துள்ளதாவது:

சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த குறிப்பிட்ட படகானது,  இத்தாலியின் லம்பெடுசா தீவிலிருந்து 6 மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த ரோந்து கப்பலானது இதைக் கண்டு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் அந்த படகில்பயணம் செய்த 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.      

வேறு சில தகவல்களின்படி குறிப்பிட்ட கப்பலில் சுமார் 50 பேருக்கு மேல் பயணம் செய்தார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.