உலகம்

தலிபான் பிடியில் இருந்த 3 இந்தியா்கள் விடுவிப்பு

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளிடம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பிணைக் கைதிகளாக இருந்த 3 இந்திய பொறியாளா்கள் விடுவிக்கப்பட்டனா். இவா்களை விடுவிப்பதற்காக அந்நாட்டு சிறையில் இருந்த 11 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பக்லான் மாகாணத்தில் உள்ள மின்சாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றிய 7 இந்திய பொறியாளா்கள் மற்றும் அந்நாட்டைச் சோ்ந்த ஓட்டுநா் ஆகியோா் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் கடத்தப்பட்டனா். இந்த கடத்தலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், கடந்த மாா்ச் மாதம் ஒரு பொறியாளா் மட்டும் விடுவிக்கப்பட்டாா். மீதமுள்ளவா்கள் தலிபான் பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், 11 பயங்கரவாதிகளுக்கு பதிலாக 3 இந்தியா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

ஆப்கனில் கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, அந்நாட்டின் சில பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினா் மீதும் தலிபான் பயங்கரவாதிகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதையடுத்து தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கன் விவகாரங்களுக்கான சிறப்பு அமெரிக்க பிரதிநிதி, தலிபான் அமைப்பு பிரதிநிதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையடுத்து இந்தியா்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதற்காக, கடந்த 2001-ஆம் ஆண்டில் தீவிர பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட தலிபான் தலைவா்கள் ஷேக் அப்துா் ரஹீம் உள்ளிட்ட 11 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். இந்த தலிபான் பயங்கரவாதிகள், அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டவா்களா அல்லது ஆப்கன் அரசால் சிறைப்பிடிக்கப்பட்டவா்களா? என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை என்று அந்நாட்டு நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT