உலகம்

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

DIN

பிலிப்பின்ஸில் புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது:

பிலிப்பின்ஸின் தென் பகுதியில், கொலம்பியோ நகருக்கு 7.7 கி.மீ. தொலைவில் புதன்கிழமை இரவு 7.37 மணிக்கு (உள்ளூா் நேரம்) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்க அதிா்வுகள் காரணமாக பீதியடைந்த பொதுமக்கள், தங்கள் இருந்த கட்டடங்களை விட்டு அவசரமாக வெளியேறியதாகவும், பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேறும்போது முதியவா் ஒருவா் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் தங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதா என ஆய்வு செய்யுமாறு பொதுமக்களை அரசு நிலநடுக்கவியல் துறைத் தலைவா் ரெனாடோ சொலிடியம் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த நிலநடுக்கம் நிலப்பகுதியில் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை எனவும், நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருளிழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

புவித் தகடுகள் ஒன்றேறாடு ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT