பாகிஸ்தானின் முதல் ஹிந்துப் பெண் காவல் அதிகாரி புஷ்பா கோல்ஹி 
உலகம்

பாகிஸ்தானில் முதன்முறையாக ஹிந்துப் பெண் ஒருவர் காவல் பணிக்குத் தேர்வு  

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்  முதன்முறையாக ஹிந்துப் பெண் ஒருவர் காவல் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்  முதன்முறையாக ஹிந்துப் பெண் ஒருவர் காவல் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

பாகிஸ்தானில் மொத்தம் 75 லட்சம் ஹிந்துக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள சிறுபான்மையினோர்களில் அதிக அளவிலானோர் ஹிந்து மக்களே ஆவர். இதில் பெரும்பான்மையானோர் சிந்து மாகாணத்தில் இருக்கிறார்கள்.    

இந்த சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் புஷ்பா கோல்ஹி. இவர் சிந்து மாகாண அளவிலான காவல்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, துணைக் காவல் ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை பாகிஸ்தானிலிருந்து செயல்படும் மனித உரிமைச் செயல்பாட்டாளரான கபில் தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இதே சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சுமன் போதானி என்ற பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT