உலகம்

41 கோடி பயனாளர்களின் செல்போன் எண்களை ஆன்லைனில் வெளியிட்டது ஃபேஸ்புக்

IANS


சான் பிரான்சிஸ்கோ: ஏற்கனவே பாதுகாப்புக் குளறுபடிகளில் ஜம்பவான் என்று பெயர்பெற்ற ஃபேஸ்புக், தற்போது மீண்டும் அதனை ஒரு முறை நிரூபித்துள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களில் 41 கோடி பேரின் செல்போன் எண்களை ஆன்லைனில் வெளியிட்டு மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறலை செய்திருக்கிறது ஃபேஸ்புக்.

அமெரிக்காவைச் சேர்ந்த 13.3 கோடி பயனாளர்களின் செல்போன் எண்களும், ஒரு கோடியே 80 லட்சம் இங்கிலாந்து பயனாளர்களின் எண்களையும், வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் செல்போன் எண்களும் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபேஸ்புக் ஐடியுடன் அவர்களது செல்போன் எண்களும் வெளியாகியிருப்பதாகவும், இதன் மூலம் பயனாளர்கள் தேவையற்ற அழைப்புகளை எதிர்கொள்ளவும், சிம் ஸ்வாப்பிங், சிம் ஜேக்கிங் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தி ஹேக்கில் இருந்து செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சன்யம் ஜெயின் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக செல்போன் எண்கள் ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்டது. சில செல்போன் எண்களுடன் அவரது நாடு, பாலினம், பெயரும் இடம்பெற்றிருந்ததாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

ஃபேஸ்புக் தரப்பில் இது பழைய தகவல்கள் என்றும், தற்போது அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT