உலகம்

சீன மகளிர் இலட்சியம் பற்றிய வெள்ளையறிக்கை

DIN


“சமத்துவம், வளர்ச்சி, கூட்டுப் பகிர்வு:கடந்த 70 ஆண்டுகளில் சீன மகளிர் இலட்சியத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும்” என்ற தலைப்பிலான வெள்ளையறிக்கையை சீன அரசவையின் செய்தி அலுவலகம் 19ஆம் நாள் வெளியிட்டது.

தற்போது சீனச் சமூகத்தில் வேலைக்குச் செல்பவர்களில் மகளிரின் விழுக்காடு 40 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் சீன மகளிர் இலட்சியம், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் இலட்சிய வளர்ச்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக சீனாவின் கட்டுமானம், சீர்திருத்தம், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மகளிர் முனைப்புடன் பங்காற்றி வருகின்றனர். சட்டத்தின் படி, கோடிக்கணக்கான மகளிர் தங்கள் ஜனநாயக அதிகாரத்தைச் சமமாகப் பயன்படுத்தி அதிகமான சாதனைகளைப் படைத்துள்ளனர் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சீன மகளிர் இலட்சியத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற வரலாறு, நாட்டின் செழுமை மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அவர்கள் போராடிய வரலாறு ஆகும். புதிய யுகத்தில் சீனா, மகளிரின் வாழ்க்கை நிலையைத் தொடர்ந்து மேம்படுத்தி, மகளிர் இலட்சியத்தைத் தொடர்ந்து முன்னேற்றம் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT