உலகம்

பேச்சுவார்த்தையில் புதிய அணுகுமுறை: டிரம்ப் யோசனைக்கு வட கொரியா வரவேற்பு

DIN


தங்களுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் புதிய அணுகுமுறையைக்  கையாள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள யோசனையை வட கொரியா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து வட கொரிய தூதரக அதிகாரி கிம் மியோங்-கில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வட கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது தொடர்பாக எங்களோடு புதிய அணுகுறையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும்.
மேலும், இந்த விவகாரத்தில் கடுமையான நிலையைக் கடைப்பிடித்து வந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனை அவர் பதவி நீக்கம் செய்ததையும் வரேவற்கிறோம்.
இனி, அமெரிக்காவுக்கும், எங்களுக்கும் இடையே புதிய அணுசக்தி பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், வியத்நாம் தலைநகர் ஹனோயிலும் இரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 மேலும், கொரிய எல்லைப் பகுதியில் கிம் ஜோங்-உன்னை அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி திடீரென சந்தித்து பேசினார்.
எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த அவர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த ஜான் போல்ட்டனை அதிபர் டிரம்ப் இந்த மாதம் பதவி நீக்கம் செய்தார்.
லிபியாவின் அணு ஆயுதத் திட்டங்களை அந்த நாடு கைவிடச் செய்ததற்குக் கையாண்ட வழிமுறையையே வட கொரியாவிடமும் பின்பற்ற வேண்டும் என்று போல்ட்டன் வலியுறுத்தியதாகக் குற்றம் சாட்டிய 
அதிபர் டிரம்ப், இந்த விவகாரத்தில் வட கொரியாவுக்கென்று புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டிருக்கும் என்று குறிப்பிட்டார்.
அதனைக் குறிப்பிட்டே வட கொரிய தூதரக அதிகாரி கிம் மியோங்-கில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT