உலகம்

சீனாவில் 2020-இல் தனிப்பட்ட வலையமைப்பில் 5 ஜி தொழில்நுட்பம்

DIN


அடுத்த ஆண்டில் தனிப்பட்ட வலையமைப்பிலான 5 ஜி தொழில் நுட்ப வளர்ச்சியில், சீனா, அதிக முதலீடு செய்ய உள்ளது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மியோ வெய் 20ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் 5 ஜி தொழில் நுட்பம் தொழில் இணையம், வாகன இணையம், தொலைதூர மருத்துவம் உள்ளிட்ட துறைகளில்80 விழுக்காட்டுக்கும் மேலான அளவில் பயன்படுத்தப்படும் என்றும் மியோ வெய் தெரிவித்தார்.

உயர்வேகம், நேரதாமதம் குறைவு, நம்பகத் தன்மை முதலிய சிறப்பம்சங்களை 5 ஜி தொழில் நுட்பம்கொண்டுள்ளது. அது, புதிய தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சித் திசை மற்றும் எண்ணியல் பொருளாதாரத்தின் முக்கிய அடிப்படையாகும். 2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை சீன வணிகத் துறையில் 5 ஜி தொழில் நுட்பத்தால்மொத்தமாக 10 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவான்வருமானம் கிடைக்கும். மேலும் 30 இலட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT