உலகம்

அமெரிக்காவில் 11 நாடுகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

DIN

நியூயார்க்கில் பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். இதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அந்தந்த நாடுகளுடனான நட்புறவு, முதலீடு உள்ளிட்ட புரிந்துணர்வு பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பல்கேரியா, துருக்கி, உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, இரு நாடுகள் இடையிலான கூட்டமைப்பு, வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, அமைதி, எரிசக்தி, பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான முக்கியப் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT