உலகம்

ஐ.நா சாசனத்தின் அடிப்படை கோட்பாட்டை சீனா பின்பற்றும்: சீன வெளியுறவு அமைச்சர்

DIN


சமநிலை கொண்ட அரசுரிமையை பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யாமை ஆகிய ஐ.நா சாசனத்தின் அடிப்படை கோட்பாட்டை சீனா பின்பற்றும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். 

நியூயார்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற 74-வது ஐ.நா பேரவை பொது விவாதத்தில் சீன அரசவையின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ கலந்துகொண்டார். இதில், "இன்றைய சீனா, உலகின் சீனா" என்ற தலைப்பில் அவர் நேற்று (செப்டம்பர் 27) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

"இவ்வாண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 70 ஆண்டு காலத்தில், சீன மக்கள் கடினமாக வேலை செய்து, சொந்த தலைவிதியை பெருமளவில் மாற்றியுள்ளனர். வளர்ந்த நாடுகள் சில நூறு ஆண்டு காலத்தில் எட்டிய முன்னேற்றங்களை சீனா சில பத்து ஆண்டுகாலங்களுக்குள்ளாகவே எட்டியுள்ளது.

நிறுவப்பட்ட 70 ஆண்டுகளில், நவ சீனா உலகத்தை இணைத்து, உலகிற்குப் பங்காற்றியுள்ளது. சொந்த வளர்ச்சியின் மூலம், சீனா, உலகின் அமைதியையும் செழுமையையும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகின்றது. சீனா, உலக வளர்ச்சிக்கு ஆற்றல் அளித்து, சர்வதேச அமைதியை விரைவுபடுத்தியுள்ளது.

சுதந்திரமான அமைதியான தூதாண்மை கொள்கையில் சீனா தொடர்ந்து ஊன்றி நின்று, தேசிய நலனையும் சரியான உரிமையையும் பேணிக்காக்கும். சமநிலை கொண்ட அரசுரிமையை பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யாமை ஆகிய ஐ.நா சாசனத்தின் அடிப்படை கோட்பாட்டை சீனா பின்பற்றும்" என்றார்.

தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT