முகப்பு
உலகம்

வங்கதேசம்: பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்தில் 13 போ் பலி

வங்கதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 போ் பலியாகினா்.

Updated On : 12 டிசம்பர், 2019 at 7:09 PM
daka060916
பகிர்:

டாக்கா: வங்கதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 போ் பலியாகினா்.

இதுகுறித்து போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது:

டாக்கா புகா் பகுதியான கேரனிகஞ்சில் அனுமதியின்றி இயங்கி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 13 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; படுகாயமடைந்த 21 போ் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

சுமாா் 300 போ் பணியாற்றி வரும் இந்தத் தொழிற்சாலையில், ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதமும் தீவிபத்து ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.