உலகம்

சீனாவின் நாடு கடந்த வணிகம் மீண்டும் துவக்கம்

DIN

கொவைட்-19 நோய் பரவல் உலகளவில் பல சந்தைகளில் நுகர்வுத் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்னல்களைச் சமாளித்து சீன – ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டிச் சேவையை அண்மையில் சீனா மீட்டுள்ளது. சீனாவில் இருந்து இருப்புப் பாதை மூலம் ஏற்றிச் செல்லப்படும் பெருமளவிலான பொருட்கள், ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் சந்தை முடக்க நிலையைத் தணிவு செய்யும். 

இது மட்டுமல்லாமல் மார்ச் நடுப்பகுதி முதல், உலகில் மிகப் பெரிய துறைமுகமான ஷாங்காய்க்கு வந்து செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக உலகின் இரண்டாவது பெரிய துறைமுகமான சிங்கப்பூர் துறைமுகம், ஐரோப்பிய துறைமுக முனையமான ரொடெர்டாம் துறைமுகம் ஆகியவற்றில் வணிக மீட்சி காணப்படுகின்றது. இது குறித்து, தொடர்புடைய தொழில் துறை வட்டாரத்தினர்கள் கூறுகையில், வணிகப் பொருட்களின் போக்குவரத்தைக் கையாளச் சீனா தயாராக இருப்பதால், ரொடெர்டாம் உள்ளிட்ட துறைமுகங்களின் சரக்கு போக்குவரத்து சுறுசுறுப்பாகி வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்சி நடவடிவடிக்கைகள், உலகின் விநியோகச் சங்கிலி சீராகுவதற்குரிய நம்பிக்கையை அளித்துள்ளன. விநியோகச் சங்கிலி இயல்பாகச் செயல்பட்டால் மட்டுமே, பொருளாதாரத்தைத் தீவிரப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் எடுத்து வரும் ஒட்டுமொத்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் உண்மையான பயனை அளிக்க முடியும். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT