முகப்பு
உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேருக்கு கரோனா தொற்று 

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் 216 நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. உலகளவில் அந்த வைரஸுக்கு இதுவரை 1,056,581 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 55,780 பலியாகியுள்ளனர். 

அதேசமயம் வைரஸ் பாதிப்பில் இருந்து 224,007 குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மாஸ்கோவில் 448 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இத்துடன் அங்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,149ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.