உலகம்

கடந்த 17 நாட்களில் இதுதான் குறைவு: ஸ்பெயினில் ஒரேநாளில் 605 பேர் பலி

DIN

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை கடந்த 17 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஸ்பெயினிலும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. 

நோய்த் தொற்றால் அதிகம் பாதித்தோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகவும், நோய்த் தொற்றால் அதிகம் பலியானோர் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலிக்கு அடுத்தபடியாகவும் ஸ்பெயின் உள்ளது.

அங்கு தினமும் நூற்றுக்கணக்கில் கரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புக்கு 605 பேர் உயிரிழந்துள்ளனர். இது தினசரி இறப்புகளில் கடந்த 17 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும். 

இதன்மூலம், அந்நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 15,843 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,57,022 ஆகவும், அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 55,668 ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT