கோப்புப்படம் 
உலகம்

ஸ்வீடன்: கரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது

ஸ்வீடனில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. 

DIN

ஸ்வீடனில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. 

சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா நோய்த் தொற்று, தற்போது உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர். உலகளவில் கரோனாவுக்கு இதுவரை 19,47,860 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,21,793 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஸ்வீடனில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. 

அங்கு கரோனாவுக்கு இதுவரை 1,033 பேர் பலியாகியுள்ளதாகவும், அதேசமயம் 11,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொதுசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை பரிசளிக்கும்... அஸ்லி மோனலிசா

விழிகளின் தேடல்... ரிச்சா ஜோஷி

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

SCROLL FOR NEXT