ஸ்பெயினில் ஒரேநாளில் 585 பேர் உயிரிழப்பு; பாதிப்பு 1,90,000 ஆயிரத்தை நெருங்குகிறது!
ஸ்பெயினில் ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் உள்ளது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,90,000 ஐ நெருங்கியுள்ளது. தற்போது 1,84,948 ஆக இருக்கும் நிலையில், உயிரிழப்பு 19,135 ஆக இருக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் ஸ்பெயினில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 5,252 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை உயிரிழப்பு எண்ணிக்கை 551 ஆக உள்ளது.
இந்த வாரம் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து வைரஸ் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அந்நாட்டு அரசு ஆலோசகர் பெர்னாண்டோ சைமன் கூறினார்.