முகப்பு
உலகம்

கரோனா: சிங்கப்பூரில் பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இந்த வைரஸால் இதுவரை 21,97,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,47,512 பேர் பலியான நிலையில் 5,57,618 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் சிங்கப்பூரில் நேற்று மட்டும் புதிதாக 728 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4400ஐ தாண்டியுள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.