உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியது

DIN

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. 

அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 99 ஆயிரத்து 998 பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 7 லட்சத்து 38 ஆயிரத்து 913 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் ஆயிரத்து 891 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT