கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் பலியாகினர்.
கனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் என்பீல்ட் என்ற பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளது. இங்கு காவலர் சீருடையில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் பெண் காவலர் உட்பட 16 பேர் பலியாகினர். அத்துடன் பலர் காயமுற்றதாக கூறப்படுகிறது.
விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கேப்ரியலை என்பதும் அவர் போலீஸ் சீருடை அணிந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.