முகப்பு
உலகம்

94-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டிஷ் ராணி வைத்த முக்கிய கோரிக்கை

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று தனது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒருபக்கம் கரோனாவின் கோரப்பிடி, மறுபக்கம் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே எந்த ஆடம்பர நிகழ்ச்சிகளும் இன்றி பிறந்தநாள் கொண்டாடப

Updated On : 21 ஏப்ரல், 2020 at 2:58 PM
பகிர்:

லண்டன்: பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று தனது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒருபக்கம் கரோனாவின் கோரப்பிடி, மறுபக்கம் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே எந்த ஆடம்பர நிகழ்ச்சிகளும் இன்றி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி போன்ற காரணங்களால் பெர்க்ஷையரில் உள்ள வின்ட்சர் அரண்மனையில் இருந்தபடி தனது கணவர் இளவரசர் ஃபிலிப்புடன் இந்த பிறந்தநாளை அமைதியான முறையில் கொண்டாடி வருகிறார்.

முன்னதாக, நாடு கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால், வழக்கமாக ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு 21 குண்டுகளை முழக்கி வணக்கம் வைக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டாம் எலிசபெத் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது 68 ஆண்டு கால ஆட்சியில் இதுபோன்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Advertisement

தற்போதிருக்கும் சூழ்நிலையில், குண்டுகள் முழங்க வணக்கம் வைக்கும் சூழ்நிலையில் நாடு இல்லை என்று ராணி கருதியதால்தான் இந்த கோரிக்கையை வைத்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.