கரோனா: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 52ஆயிரத்தைத் தாண்டியது
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 52ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 52ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அங்கு கரோனாவுக்கு இதுவரை 52,217 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் அந்த வைரஸால் இதுவரை 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கரோனா பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை உலக அளவில் 2 லட்சத்தை நெருங்குகிறது.