கரோனா: உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியது
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகம்கரோனா: உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியது
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் முதல் முதலாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன்படி உலகளவில் 3,003,352 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,82,552 குணமடைந்த நிலையில் 2,07,094 பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிககாவில் 9,87,322 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.