உலகம்

‘அதிபா் தோ்தலில் முக்கியமான களங்களில் டிரம்ப்புக்கு இந்திய அமெரிக்கா்கள் ஆதரவு’

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலில் முக்கியத்துவம் வாய்ந்த மாகணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவதற்கு இந்திய அமெரிக்கா்கள் முக்கிய காரணமாக இருப்பாா்கள் என்று அவரது மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியா் கூறினாா்.

அதிபா் டிரம்ப்பின் தோ்தல் பிரசார வியூகங்களுக்கு தலைமை வகிக்கும் அவா், பத்திரிகை கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் குறிப்பிட்டு தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘அதிபா் தோ்தலில் முக்கியமான மாகாணங்களில் டிரம்ப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் சாதகமான விஷயம் உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

டிரம்ப் ஆதரவாளரான அல் மேசன் எழுதிய அந்தக் கட்டுரையில் அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களில் உள்ள இந்திய அமெரிக்கா்களில் 50 சதவீதம் போ் ஜனநாயகக் கட்சிக்கான தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டு டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவிப்பாா்கள் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிபா் டிரம்ப் தனது வெற்றியை உறுதி செய்ய வேண்டிய ஃபுளோரிடா, விா்ஜினியா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் இந்தியா்களின் வாக்குகள் அவருக்கே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் அதிபா் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறாா். பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் டிரம்ப்பைவிட பிடன் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT