உலகம்

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியது!

DIN

பாகிஸ்தானில் புதிதாக 432 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,80,461 ஆக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 432 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு 2,80,461 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரேநாளில் 15 பேர் உள்பட இறப்பு எண்ணிக்கை 5,999 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,49,397 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,013 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,21,705, பஞ்சாப் - 93,336, கைபர்-பக்துன்க்வா- 34,253, இஸ்லாமாபாத் - 15,095, பலுசிஸ்தான்- 11,777, கில்கித்-பல்திஸ்தான்- 2,198 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10,690 மாதிரிகள் உள்பட இதுவரை 20,31,955 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT