முகப்பு
உலகம்

ஐரோப்பாவில் முதலீடு செய்யும் டிக்டாக்

ஐரோப்பாவில் முதன்முதலாக 50 கோடி டாலர் மதிப்பில் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2020 at 5:32 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

ஐரோப்பாவில் முதன்முதலாக 50 கோடி டாலர் மதிப்பில் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் நிறுவனம் உள்ளது. ஆண்டுகு ஆண்டு அதிகரித்து வரும் புதிய பயனர்கள் காரணமாக பல்வேறு நாடுகளில் நிறுவனத்தின் கிளைகளை நிறுவி வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பாவில் தனது முதல் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.ன் அயர்லாந்தில் அமைக்கப்பட உள்ள தரவு மையத்திற்காக 50 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

புதிதாக அமைக்கப்பட உள்ள தரவு மையத்தால் புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகும் எனத் தெரிவித்துள்ள டிக்டாக் நிறுவனம் ஐரோப்பிய மக்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

இந்த தரவுமையம் 2022 முதல் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்தில் டிக்டாக் பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.