உலகம்

இலங்கைப் பிரதமராகப் பதவியேற்றார் மகிந்தா ராஜபட்ச

DIN


இலங்கை பொதுஜன பெரமுனா கட்சித் தலைவர் மகிந்தா ராஜபட்ச 4-வது முறையாக இலங்கைப் பிரதமராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மகிந்தா ராஜபட்சவின் கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள புத்தர் கோயிலில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், புதிய பிரதமராக மகிந்தா ராஜபட்ச பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

ராஜபட்சவின் அமைச்சரவை இந்த வாரத்தில் பதவியேற்கவுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்ததன்படி, ஆகஸ்ட் 20-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT