சிங்கப்பூரில் அழிக்கப்பட்ட 8 டன் கடத்தல் யானைத் தந்தங்கள்
பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்பட்ட 8 டன் யானைத் தந்தங்களை சிங்கப்பூர் அரசாங்கம் அழித்தது.
பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்பட்ட 8 டன் யானைத் தந்தங்களை சிங்கப்பூர் அரசாங்கம் அழித்தது.
உலகின் பல நாடுகளிலும் அலங்கார பொருள்கள் செய்யவும், ராசிக்காகவும் யானைகளின் தந்தங்கள் வேட்டையாடப்படுகின்றன. சீனா மற்றும் வியட்நாம் பகுதிகளில் செய்யப்படும் ஆபரணங்களுக்காக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் தந்தங்கள் அதிகளவு வேட்டையாடப்படுகின்றன. இதனால் யானைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் குறைகின்றன. காடு உருவாக்கத்தில் முக்கிய விலங்காக உள்ள யானைகளின் இறப்பால் பல்லுயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.3 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 8 டன் யானைத் தந்தங்களை சிங்கப்பூர் அரசாங்கம் அழித்துள்ளது.
"சட்டவிரோத வர்த்தகம் காரணமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் யானைகளின் வாழ்க்கை நெருக்கடி நிலையில் உள்ளது." என்று நேச்சர் சிங்கப்பூருக்கான உலகளாவிய நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ரகுநாதன் கூறினார்.
தந்தத்திற்காக வேட்டைக்காரர்களால் ஒவ்வொரு நாளும் 100 ஆப்பிரிக்க யானைகள் கொல்லப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகள் மட்டுமே உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.