இலவச தேடல் சேவையை இழக்க நேரிடும்: ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் கூகுள்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் போன்ற தளங்கள், செய்திகளுக்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்திருக்கும் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு கூகுள் கடுமையா
கான்பெர்ரா: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் போன்ற தளங்கள், செய்திகளுக்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்திருக்கும் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு கூகுள் கடுமையான எதிர்ப்பை எழுப்பியுள்ளது.
கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள், செய்தித் தகவல்களுக்கு கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், ஆஸ்திரேலியாவில் இலவச தேடல் சேவையை இழக்க நேரிடும் என்று கூகுள் எச்சரித்துள்ளது.
கூகுள் மற்றும் முகநூல் பக்கங்கள் போன்ற வணிக ரீதியாக செயல்படும் ஊடக நிறுவனங்களிடம் இருந்து செய்திகளுக்கு என கட்டணம் வசூலிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கொண்டு வர ஆஸ்திரேலிய அரசு கடந்த வாரம் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை அடுத்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் தரப்பில் ஆஸ்திரேலிய மக்களுக்கு திறந்த கடிதம் என்ற ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஆஸ்திரேலியாவில் கூகுளில் இலவசமாகத் தேடும் சேவையை மக்கள் இழக்க நேரிடும் என்றும், பயனர்களின் தகவல்கள் ஊடக நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.