முகப்பு
உலகம்

உலகளவில் 2.50 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்குகிறது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.41 லட்சமாக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
உலகளவில் 2.50 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்குகிறது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.41 லட்சமாக உள்ளது.

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,49,11,716 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8,41,331 ஆக உள்ளது.  கரோனா பாதித்த 2.49 கோடி பேரில் 1.73 கோடிப் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 60,96,235 பேரும், பிரேசிலில் 38,12,605 பேரும், இந்தியாவில் 34,63,972 பேரும், ரஷியாவில் 9,80,405 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,72,99,915 ஆக உள்ளது. தற்போது  6,77,04,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61,194  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →