முகப்பு
உலகம்

மலேசியாவில் டிசம்பர் 31 வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும்: மலேசிய பிரதமர்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 31 வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் என மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் சனிக்கிழமை அறிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 31 வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் என மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் சனிக்கிழமை அறிவித்தார்.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மலேசிய அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் புதியதாக 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பிற நாடுகளுடனான எல்லைகளை மூடுவது மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்குத் தடை ஆகியவை மலேசியாவில் தொடர்கிறது.

மலேசியாவில் தற்போது சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தனியார் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் யாசின், “தென்கிழக்கு ஆசியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. எனினும் உலக அளவில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலமாகும்.” எனத் தெரிவித்தார்.

மலேசியாவில் இதுவரை 9 ஆயிரத்து 317 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.