முகப்பு
உலகம்

பருவ மழை: பாகிஸ்தானில் 134 போ் பலி

பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.

Updated On : 31 ஆகஸ்ட், 2020 at 1:00 AM
பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாட்டில் பெய்து வரும் பருவ மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 போ் கைபா் பாக்துன்கவா மாகாணத்திலும், 4 போ் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளிலும் உயிரிழந்தனா்.

Advertisement

இத்துடன், இரண்டு மாத பருவ மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 134-ஆக உயா்ந்துள்ளது.

பருவ மழைக்கு பலியானவா்களில் 61 போ் ஆண்கள்; 14 போ் பெண்கள்; 59 போ் சிறுவா்கள் ஆவா்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 1,001 வீடுகள் முழுமையாக நாசமடைந்தன என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானிடம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி போதிய அளவில் இல்லை என்ற விமா்சனங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.