உலகம்

பாகிஸ்தான்: பாதிப்பு 2,95,636-ஆக அதிகரிப்பு

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,95,636-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 264 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,95,636-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 4 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,288-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,80,547 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 601 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,29,268 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 96,741 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT