முகப்பு
உலகம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,157 பேர் பலி

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 3,157 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

Updated On : 3 டிசம்பர், 2020 at 5:26 PM
அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,157 பேர் பலி (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:31 PM


வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 3,157 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி 2,603 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானதே உச்சமாக இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு நாள் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது தொடர்பாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இதுவரை 13.9 மில்லியன் மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,73,836-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேநிலை அடுத்தடுத்த நாள்களிலும் நீடித்தால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள மருத்துவமனை படுக்கைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நிரம்பிவிடும் என்று மேயர் எரிக் கார்சிட்டி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களிலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்கனவே அதிக அளவில் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.