முகப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,88,853 பேருக்கு தொற்று
உலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,88,853 பேருக்கு தொற்று

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,88,853 பேருக்கு தொற்று

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,88,853 பேருக்கு தொற்று
பகிர்:

வாஷிங்டன்: அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முதல் முறையாக புதிதாக 1,88,853 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,00, 226 பேர் அமெரிக்காவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,88,853 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொற்றுநோயின் முதல் அலைகளை விட இரண்டு மடங்கு அதிகம். 

குளிர்காலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

வியாழக்கிழமை நிலவரப்படி, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,43,13,941-ஆக உள்ளது. இதுவரை 279,865 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 84,62,347 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்; 55,71,729 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 43,244 நோயாளிகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  

உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை 6 கோடியே 48 லட்சத்து  44 ஆயிரத்து 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில்14,99,346 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 44,941,481போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 1,84,03,884 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,672 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →