முகப்பு
உலகம்

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 24 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற ராணுவத் தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 24 தலிபான்கள் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற ராணுவத் தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் வெளிநாட்டு இராணுவப் படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலிபான்களுக்கு எதிரான ராணுவத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

கோக்யானி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த. இந்த நடவடிக்கையின் போது எந்தவொரு பொதுமக்களும் அல்லது பாதுகாப்புப் படையினரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 24 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் காபூலில் ஆப்கன் அரசுக்கும் தலிபானுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியதிலிருந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.