முகப்பு
உலகம்

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில்  போராட்டத்தில்  ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்
பகிர்:


வாஷிங்டன்: வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில்  போராட்டத்தில்  ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசயிகள் தில்லியில் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு நாடு முழுவதிலிருந்தும் ஆதரவு பெருகிவரும் நிலையில், அமெரிக்காவிலும் ஆதவு பெருகியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சீக்கிய அமெரிக்கர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு நகரங்களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளில் கார்களை சாலைகளில் நிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பே பாலத்தின் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய விவசாயிகளை இச்சட்டம் வறுமையில் நிறுத்தும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.