முகப்பு
உலகம்

பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்தது முதல் கரோனா தடுப்பூசி

உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலுடன் உலகிலேயே முதல்முறையாக  பிரிட்டனில் முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 6:28 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலுடன் உலகிலேயே முதல்முறையாக  பிரிட்டனில் முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 95% செயல்திறனைக் கொண்டிருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, அவசரகால பயன்பாட்டிற்காக பிரிட்டன் அரசு 8 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. அதன்படி, பைசர்-பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக, இன்று சோதனை முயற்சியாக மார்கரெட் கீனன் என்ற 90 வயது மூதாட்டி ஒருவருக்கு முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி 81 வயதான வில்லியம் ஷேக்ஸ்பியர்  என்பவருக்கு செலுத்தப்பட்டது. 

Advertisement

இந்த தடுப்பூசிகளை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 94 டிகிரி பாரன்ஹீட்) என்ற குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.