மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 1,10,000 ஆக உயர்வு
மெக்சிகோவில் கரோனா தொற்று பாதித்து இதுவரை 1,10,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் கரோனா தொற்று பாதித்து இதுவரை 1,10,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மெக்சிகோவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.
அதன்படி, டிச.8-ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு நிலவரத்தை அந்த நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மெக்சிகோவில் புதிதாக 6,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,2,249 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரேநாளில் 357 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,10,074 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதித்த 8,73,555 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 1,98,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,279 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.