ஆப்கனில் பயங்கரவாதப் படைகள் மீது தாக்குதல்: 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதப் படைகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதப் படைகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடக்கு ஃபரியாப் மாகாணத்தில் வியாழக்கிழமை தலிபான் முகாம் மீது அரசுப் படை திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.