பிரேசிலில் ஒரேநாளில் 42,889 பேருக்குத் தொற்று: 964 பேர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 964 பேர் பலியாகியுள்ள நிலையில் அந்நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,82,799 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 964 பேர் பலியாகியுள்ள நிலையில் அந்நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,82,799 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் பிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் புதிதாக 42,889 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,97,0,034 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அதேசமயம் இதுவரை 6,067,862 பேர் தொற்று பாதித்து குணமடைந்துள்ளனர். 723,542 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.