நைஜீரியா பள்ளி மாணவர்கள் கடத்தல்: இதுவரை 17 பேர் மீட்பு
நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா பகுதியில் இருந்து தீவிரவாதக் குழுவால் கடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில் இதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா பகுதியில் இருந்து தீவிரவாதக் குழுவால் கடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில் இதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 322 மாணவர்கள் கடத்தப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு போகோ ஹராம் ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
“கடத்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர் அண்டை மாகாணத்தில் உள்ள ஜம்பாரா காட்டில் உள்ளனர். அவர்களை காப்பாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன” என கட்சினா மாநில ஆளுநர் அமினு மசாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை 17 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவர் இறந்ததாகவும் எஞ்சிய மாணவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக நைஜீரியாவின் பாதுகாப்பு அமைச்சர் பஷீர் சாலிஹி மகாஷி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக வருகை தந்து மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.