முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 26,509 பேருக்கு கரோனா தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 16 டிசம்பர், 2020 at 4:57 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 26,509 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,34,454 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,028 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

Advertisement

மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 48,564 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதுவரை 21,76,100 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,09,790 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.