அமெரிக்க அதிபர் டிரம்பை பயங்கரவாதி என அழைத்த ஈரான் அதிபர்
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ‘பயங்கரவாதி’ டிரம்ப் வெளியேறுவதில் மகிழ்ச்சி என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி புதன்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து பயங்கரவாதி டிரம்ப் வெளியேறுவதில் மகிழ்ச்சி என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி புதன்கிழமை தெரிவித்தார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்பை வென்றதையடுத்து புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்பை சட்டவிரோதி என அழைத்த ரூஹானி டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
"பைடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் பயங்கரவாதி டிரம்ப் வெளியேறுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று ரூஹானி கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.