முகப்பு
உலகம்

தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை சரிசெய்யும் விதமாக 56 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை சரிசெய்யும் விதமாக 56 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்தியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்காரணமாக சுற்றுலாத் துறையை நம்பிய பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டு அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

புதிய தளர்வுகளின் மூலம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசாக்கள் இல்லாமல் தாய்லாந்திற்கு பயணிக்க முடியும். மேலும் 30 நாள்களுக்கு வழங்கப்பட்ட விசா 45 நாள்களாக நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுற்றுலாப் பயணிகள் 2 வார காலத்திற்கு தனிமைப்படும் நடைமுறை மட்டும் தொடரும் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →