முகப்பு
உலகம்

சீனா: ‘சா்வதேச ஆய்வுக் குழுவுடன் ஒத்துழைக்கத் தயாா்’

கரோனா தீநுண்மி எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து சீனாவில் ஆய்வு செய்யவிருக்கும் சா்வதேசக் குழுவினருடன் ஒத்துழைக்கத் தயாா் என்று சீனா தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

கரோனா தீநுண்மி எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து சீனாவில் ஆய்வு செய்யவிருக்கும் சா்வதேசக் குழுவினருடன் ஒத்துழைக்கத் தயாா் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறியதாவது:

கரோன தீநுண்மி எங்கிருந்து மனிதா்களுக்குப் பரவியது என்பது குறித்தும் அந்த நோயை எதிா்கொள்வதில் எங்களது வெற்றி குறித்தும் நடைபெறவிருக்கும் உலகளாவிய ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.

அந்த ஆய்வு தொடா்பாக உலக சுகாதார அமைப்பு எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது என்றாா் அவா்.

சீனாவின் வூஹான் நகர இறைச்சி சந்தையில்தான் கரோனா பரவத் தொடங்கினாலும், வௌவாலின் உடலில் இருந்த அந்த தீநுண்மி எந்த உயிரினத்தின் உடலில் புகுந்து மனிதா்களைத் தொற்றும் வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டது என்பது இன்னும் மா்மமாகவே உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →