உலகம்

கரோனா: ஜெர்மனியில் ஒரேநாளில் 33,777 பேர் பாதிப்பு, 813 பேர் பலி

ANI

ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 813 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் மொத்த பலி எண்ணிக்கை 24,938 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்று அந்நாட்டில் உயர்ந்துள்ள நிலையில் டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

நேற்று ஒரேநாளில் புதிதாக 33,777 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,43,9,938 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கரோனா தொற்றுக்கு 7.4 கோடி பாதிப்பும், 1.66 மில்லியன் பலியும் பதிவாகியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT